அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை

Weather Update
Reading Time: 3 minutes

2019ஆம் ஆண்டு துவங்கியது முதல் பெரும்பாலும் வறண்ட வானிலை மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக தமிழகம் முழுவதும் நீடித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சற்றே பலமான மழை பெய்தது. கடந்த இரண்டு தினங்களில் பெய்த மழையின் காரணமாக இந்தியா வானிலை துறை தொகுத்து வழங்கும் தினசரி மழை குறியீட்டில் நேற்றைய நிலைப்படி தமிழகம் மற்றும் புதுவையில் 2.1 மிமீ எட்டி உள்ளது. நேற்று வரையிலான சராசரி மழை அளவு 17.1 மிமீ ஆகும்.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்கள் கீழை மற்றும் மேலைக்காற்றின் குவிப்பு காரணமாக ஏற்பட்ட சலனம் தற்போது முடிந்து விட்டது. தென் இந்தியா தீபகற்ப பகுதியில் மழைக்கான எந்த ஒரு பெரிய காரணியும் நிலவி வரவில்லை. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை சார்ந்த தென்கிழக்கு வங்கக்கடல் / அந்தமான் கடற்பகுதியில் ஓர் தரை நிலை குறைந்த காற்று அழுத்த நிலை நிலவி வருகிறது என்ற போதிலும் பரவலான மழை பெய்ய ஏதுவான சூழல் இந்திய துணைக்கண்டத்தில் இல்லாததால் தமிழகத்திற்கு அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்க வாய்பு உள்ளது.

பரவலான மழை நிகழ்வு பெய்ய வேண்டுமெனில் இரு முக்கிய காரணிகள் சாதகமாக நிலவ வேண்டும் ஒன்று வெப்ப மண்டல காற்று குவிப்பு பகுதி (ITCZ) மற்றொன்று மேடேன் ஜூலியன் ஒத்த அலைவு (MJO).  மேலடுக்கு காற்று சுழற்சி, கடல் வெப்பம் போன்ற ஏனைய காரணிகள் மேற்கூறிய இரு காரணிகள் சாதகமாக அமைந்தாலே நல்ல ஓர் மழை நிகழ்வை ஏற்படுதக்கூடும்.தென்மேற்கு பருவமழை / வடகிழக்கு பருவமழை / கோடை மழை என எந்த ஒரு மழை நிகழ்விற்கும்இந்த ITCZ வடதுருவத்தில் இருத்தல் அவசியம், தற்போது இது பூமத்திய ரேகைக்கு கீழே தென் துருவத்தில் நீடித்து வருகிறது.  வட துருவத்தில் குளிர்காலம் முடிந்து வசந்த கால துவக்கத்தில் இது மேல் நோக்கி நகர துவங்கி கோடைகாலத்தில் பருவமழை அகடாக (Monsoon Trough) இந்தியா துணைகண்டத்தில் மையம் கொண்டு தென்மேற்கு பருவமழையின் முக்கிய காரணியாக உருவெடுக்கும்.

மேலும் அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கில் இருந்து வரும் வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதன் காரணமாக மேலடுக்கில் உள்ள காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படும். காற்றின் ஈரப்பதம் குறைந்து இருந்தால் வறண்ட வானிலையே நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாடைக்காற்றின் தாக்கம் காரணமாக இரவு நேர வெப்பநிலை கடந்த சில தினங்களை விட குறைந்தே காணப்படும்.