அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்ப நிலை

வட அரைக்கோளத்தில் கோடைக்காலம் துவங்க அதிக தூரம் இல்லாத நிலையில் தமிழகத்தில் வெப்ப நிலை உயர துவங்கி உள்ளது. கடந்த சில நாட்கள் கரூர் போன்ற உட்புற பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சற்று குறைவாக பதிவாகியது. நேற்று திருவனந்தபுரம் இந்திய வானிலை மையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது வரை இந்த மையத்தில் அதிகம் பதிவான வெப்ப நிலை இதுவே ஆகும்.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்கள் கீழை காற்று சற்று பலமாக வீசியதால் பகல் நேர வெப்ப நிலை சற்று குறைந்து காணப்பட்டது. வரும் 4 / 5 நாட்களுக்கு தென் இந்திய தீபகற்பத்தை ஒட்டிய பகுதியில் நிலவக்கூடிய உயர்ந்த காற்று அழுத்த பகுதி காரணமாக வறண்ட வானிலை மற்றும் இயல்பிற்கு அதிகமாக வெப்ப நிலை நீடிக்கக்கூடும் என கணிக்கின்றன

பரவலாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் இயல்பை விட 1 – 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பகல் நேர வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். உயர்ந்த காற்று அழுத்த பகுதி நீடிப்பதால் மழைக்கான வாய்பு குறைவே. இரவு நேர வெப்ப நிலை, தரைபகுதியில் இருந்து வரும் காற்று காரணமாக இயல்பை விட சற்று குறைவாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.