கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வடகிழக்கு பருவ மழை பரவலாக ஏமாற்றத்தை அளித்து உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
2016 ஆம் ஆண்டு வரலாறு காணாத பற்றாக்குறைக்கு பின் 2017ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பிற்கு சற்று குறைவாகவே இருந்தது பின் 2018 ஆம் ஆண்டும் வடகிழக்கு பருவமழை பொய்து விட்டது எனவே சொல்லலாம். எனினும் கடந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலங்களில் பெய்த பெரு மழை காரணமாக தமிழகத்தின் பல அணைகள் நிரம்பியது ஓர் ஆறுதல் அளிக்கும் நிகழ்வு.
வடகிழக்கு பருவமழை பொய்து விட்ட நிலையில் பின் வரும் குளிர் காலம் / கோடைகால மழை சாதகமாக இருக்குமா என்ற கேள்வி தற்போது அனைவரது மனதிலும் உள்ளது. வானிலை நிகழ்வுகள் மாறுதலுக்கு உட்பட்டது என அனைவரும் அறிந்ததே எனினும் நாம் கடந்த காலங்களின் புள்ளி விவரங்களை ஆரைந்தோமெனில் சில பதில் / அறிகுறிகள் தெரிந்து கொள்ளலாம்.
அத்தகைய ஓர் தேடுதலே இன்றைய பதிவு. இந்த ஆய்விற்கு 1951 முதல் 2018 வரை இந்தியா வானிலை துறை தமிழகம் மற்றும் புதுவை துணை பிரிவு மழை அளவுகளை எடுத்து ஆங்கில ஆண்டு முறையில் பார்க்காமல் “நீர் ஆண்டு” (ஜூன் முதல் மே) முறையில்
இந்த தேடுதலில் நாம் இரு வெவ்வேறு கோணங்களில் பார்துள்ளோம்.
- குறைவான பருவ மழை அளவை சந்தித்த ஆண்டுகளை பின் தொடர்ந்த குளிர் காலம் / கோடைகாலங்களில் மழை அளவு எவ்வாறு இருந்துள்ளது
- குளிர்காலம் / கோடைகாலங்களில் மழை மிகுதி பெற்ற ஆண்டுகளில் வடகிழக்கு பருவ மழை எவ்வாறு இருந்தது
இந்த இரு கோணங்களில் இருந்தும் ஓர் பொதுவான கூற்று தென்படுகிறது தமிழகத்தின் மழை நிகழ்வுகள் ஆராய வேண்டுமெனில் ஆங்கில ஆண்டு (Calendar Year) முறையை பார்க்காமல் நீர் ஆண்டு முறையை பார்ப்பது உசிதம். புள்ளி விவரப்படி வடகிழக்கு பருவமழை குறைந்து பெய்துள்ள ஆண்டுகளை தொடர்ந்து வந்த குளிர் மற்றும் கோடைக்காலங்களும் அதே போன்ற நிலையே நீடித்து உள்ளது.
இதே போல் குளிர் மற்றும் கோடைக்காலங்களில் மிகுதியான மழை பெய்த ஆண்டுகளில் ஒரே ஓர் ஆண்டு மட்டுமே, 1961, வடகிழக்கு பருவமழையில் பற்றாக்குறை நிலையை பார்துள்ளது. புள்ளி விவரங்கள் நமக்கு கூறும் கூற்று கடந்த கிட்டதட்ட 70 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மாத்திரமே பற்றாக்குறை பருவமழைக்கு பிறகு மழை மிகுதி குளிர் / கோடைக்காலம் ஏற்பட்டுள்ளது.
நாம் முன்னேமே கூறியது போல் ஒவ்வோர் ஆண்டும் வானிலை நிகழ்வுகள் மாறுதலுக்கு உட்பட்டது எனினும் வானிலை வரலாற்றை நாம் நிச்சயம் உதாசீன படுத்த முடியாது.. எனவே நீர் சேமிப்பு இந்த ஆண்டு மிகவும் முக்கியம் ஆகிறது.
வேளாண் பெருமக்கள் சற்று தீர ஆராய்ந்து வரும் நாட்களில் பயிர் நடவு பற்றி முடிவு எடுப்பது உசிதம். இதே போல் ஏற்கனவே பயிரிட்டுள்ள நிலங்களில் மழையை நம்பாமல் நீர் சேமிப்பு மூலம் சாகுபடி வரை பத்திரமாக எடுத்து செல்லுவதும் சிறந்தது