இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சற்று வலுவற்ற நிலையில் துவங்கிய போதிலும் நவம்பர் மாதத்தின் பிற்பகுதி முதல் பரவலாக மழை கொடுக்க துவங்கியது. டிசம்பர் மாதம் நிவார் மற்றும் புரவி புயல்கள் காரணமாக பல இடங்களில் அதீத மழை நிகழ்வுகளையும் நாம் பாரதோம். கடந்த வாரம் கிழக்கத்திய அலை (Easterly Wave) காரணமாக கடலோர தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
பரவலாக தமிழகத்தை பொறுத்த வரை கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை என்ற பழமொழி மிகவும் பிரபலம். நாம் முன்பே கூறியது போல லா நினா ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக விடை பெறக்கூடிய வாய்ப்பு அதிகம். இந்த சமயங்களில் நாம் பொதுவாக நம்பும் மழை நிகழ்வின் கால அட்டவணை படி செல்லும் பொது மார்கழி மாதம் பெய்யும் மழை நிகழ்வுகள் நம்மை அச்சபடுத்தி விடுகின்றன.
விவசாயிகளும் வானிலை நிகழ்வுகள் தொடர்ந்து கவனித்து மற்றும் அதனை சார்ந்த தேடுதல் முயற்சிகள் மூலம் வானிலை அறிவை வளர்த்து கொள்வது அவசியம் ஆகிறது. நமது வலைபதிவில் தொடர்ந்து நாம் முன்னெடுக்கும் பல முயற்சிகள் “Weather Wise Community” எனும் ஓர் இலக்கை நோக்கியே பயணிக்கிறது