கடந்த ஓரிரு நாட்களாக கேரளா மற்றும் தென் கர்நாடக பகுதிகளில் காற்றின் சலனம் காரணமாக இடி மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று சாரல் மழை பெய்தது.
மேற்கு கரையோர பகுதிகளில் காற்றின் திசை கிழக்கில் இருந்து மேற்காக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இது படிப்படியாக உட்புற பகுதிகளிலும் மாற துவங்கி விடும். இந்த சூழலில் காற்றில் ஏற்படும் சலனம் காரணமாக இடி மழை உருவாக எதுவாகிறது. தற்போது தாற்காலிகமாக காற்றின் போக்கில் மாற்றம் இருக்கும் இடங்களில் இடி மழை பெய்கிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் சில இடங்களில் இந்த காற்றின் சலனம் ஏற்படக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. இதனால் திண்டுக்கல் முதல் தென்காசி வரையிலான பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடிய சூழல் உள்ளது.
வரும் ஓரிரு நாடகளுக்கு உட்புற தமிழகத்தில் வெப்ப சலன மழை ஆங்காங்கே ஏற்படக்கூடும். எனினும் தற்போது மழையின் அளவு சற்று குறைந்தே காணப்படும். வெப்பமண்டல காற்று குவிதல் பகுதி (ITCZ) தென் அரைக்கோளத்தில் இருந்து வட அரைக்கோளத்திற்கு பயணம் செய்யும் பொழுது பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியை அடையும் பொழுது மழையின் அளவு அதிகரிக்க துவங்கும்